Exodus Overview
Power Point PPTX
- பதிவிறக்கம்
செய்ய மேலுள்ள
படத்தின் மீது
Click செய்யவும்
யாத்திராகமம்
வேதாகமத்தின் இரண்டாவது
புத்தகம்
(Pastor. Gabriel Thomasraj)
யாத்திராகமத்தின்
அர்த்தம்
·
கிரேக்க
மொழியில் “Exodos”
என்ற வார்த்தையில்
இருந்து ஆங்கிலத்தில்
இது “Exodus” என்று அழைக்கப்படுகிறது.
·
இதன்
அர்த்தம் - “பாதையில்
பயணித்தல்”
·
இஸ்ரவேல் ஜனங்களின்
மிகப்பெரிய இடப்பெயர்வு
பயணத்தை முன்னிட்டே
இந்த பெயர் இந்த
புத்தகத்திற்கு
வந்தது.
ஆக்கியோன்
·
இந்த
புத்தகத்தை எழுதியவர்
மோசே என்பது
பாரம்பரிய நம்பிக்கை.
·
வேதாகமத்தின் வேறு புத்தகங்களில்
இது “மோசேயின்
நியாயப்பிரமாணம்”
என்று குறிப்பிடப்படுகிறது
(யோசுவா 1:7, 1 இரா 2:4). இதனால்
யாத்திராகமத்தையும்
அதிலே இடம்பெற்றுள்ள
கற்பனைகளையும்
மோசே எழுதினார்
என்பது புலனாகிறது.
·
மாற்கு 7:10-ல் இயேசு,
“மோசே சொல்லியிருக்கிறாரே”
என்று யாத்
20:12, 21:17 ஆகிய வசனங்களை
மேற்கோள் காட்டியதன்
மூலம் இந்த புத்தகத்தை
எழுதியவர் மோசே என்கிற
புரிதலை உறுதிப்படுத்துகிறார்.
·
எகிப்தின் அரண்மனையில்
வளர்க்கப்பட்டு
அங்கு மோசே
பெற்ற கல்வியறிவு
இவற்றை எழுதுவதற்கான
வாய்ப்பையும்,
திறமையையும் நிச்சயமாய்
கொடுத்திருக்கும்
(அப். 7:22)
தகவல்கள்
·
கி.மு.1445 முதல் கி.மு.1404 காலப்பகுதியில்
எழுதப்பட்டது.
·
40 அதிகாரங்களைக்
கொண்டது.
·
1213 வசனங்களைக்
கொண்டது.
வரலாற்றுக்
காலவரிசை
·
ஆதியாகமத்தில் ஆரம்பித்த
யூத மக்களின்
வாழ்க்கை சம்பவங்களை,
சுமார் 400 ஆண்டுகால
இடைவெளிக்கு பின்னர்
யாத்திராகமம்
தொடர்ந்து சொல்லுகிறது.
·
யாத்.12:40 - எபிரேயர்கள்
எகிப்தில்
தங்கியிருந்த
காலம் 430 ஆண்டுகள்.
·
இந்த
காலக்கட்டத்தில்
யோசேப்பும்,
அவனது சகோதரர்களும்,
அவர்களுக்கு ஆதரவாயிருந்த
பார்வோனும்
மரித்துப்போயிருந்தார்கள்.
·
மோசேயின் பிறப்பிற்கு
(கி.மு.1526) சற்று
முன்னான காலத்திலிருந்து
வனாந்திரத்தில்
ஆசரிப்புக்கூடாரம்
நிறுவப்பட்ட (கி.மு.1445) காலம்
வரையுள்ள சுமார்
80 ஆண்டுகள் கால
வரலாற்றை இந்த
புத்தகம் விபரிக்கிறது.
·
1 இரா.6:1-ல் காண்கிறபடி
இஸ்ரவேல்
புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து
புறப்பட்ட 480 ஆண்டுகளின்
பின்னர் சாலொமோன்
எருசலேமில்
ஆலயத்தை கட்டினான்.
யாத்திராகமத்தின்
உள்ளடக்கம்
·
விரோத
மனநிலை கொண்ட எகிப்தில்
வாழும் இஸ்ரவேலர்
(அதிகாரம் 1)
·
மோசேயின் பிறப்பும்
ஆச்சரியமான வாழ்வும்
(2:1-2:10)
·
மோசே ஏற்றுக்கொள்ளபடாமையும்,
மீதியான்
தேசத்திற்கு தப்பித்தலும்
(2:11-2:21)
·
எரியும்
செடியிலிருந்து
தேவன் மோசேயை
அழைத்தல் (3:1-4:17)
·
மோசே எகிப்திற்கு
திரும்பி தன்னை
வெளிப்படுத்துதல்
(4:18-7:13)
·
எகிப்தின் 10 வாதைகள்
(7:14-11:10)
·
பஸ்கா (12:1-13:14)
·
யாத்திரையும், எகிப்தியரிடமிருந்து
தப்பித்தலும்
(13:15-13:22)
·
இஸ்ரவேலரின் யாத்திரை
(14:1-18:27)
·
சீனாயில் உடன்படிக்கை,
பத்து கற்பனைகள்
வழங்கப்படுதலும்
(19:1-24:18)
·
ஜனங்களின் துரோகம், உடன்படிக்கையின்
புதுப்பித்தலும்
(32:1-35:3)
·
ஆசரிப்புக்கூடாரத்திற்கான அறிவுறுத்தல்களும்
அதன் நிறைவேற்றமும்
(25:1-31:18/35:4-40:38)
புவியியல்
முக்கியத்துவம்
வாய்ந்த இடங்கள்
·
ஒரு
முழு தேசமே சேர்ந்து
பயணப்பட்ட
மிகக் கடினமான
பயணம்
·
ஒரு
இரவிலே தேவன் எகிப்திலிருந்து
சரீர பிரகாரமாக
இஸ்ரவேலரை
வெளியேற்றினார்.
ஆனால் அவர்கள்
மனதிலிருந்து
எகிப்தை வெளியேற்ற
40 ஆண்டுகள் தேவைப்பட்டது.
1. ராமசேஸ்
·
1வது மாதத்தின்
15ம் நாளில்
எகிப்திலுள்ள
ராமசேசை விட்டுக்
சுக்கோத்துக்குப்
போனார்கள் (யாத் 12:37). 430 ஆண்டுகால எகிப்திய அடிமை
வாழ்வு முடிவுக்கு
வந்தது.
2. சுக்கோத்
·
எபிரேயர்கள் முதலில் பாளயமிறங்கிய
இடத்தைவிட்டு
பயணப்பட்டபோது
கர்த்தர் பகலில்
மேகஸ்தம்பத்திலும்,
இரவில் அக்கினிஸ்தம்பத்திலும்
அவர்களுக்கு முன்சென்றார்
(யாத்.13:20-22)
·
தேவன்
அவர்களை ஒரு காரணத்திற்காக
நீண்ட பயணப்பாதையில்
நடத்தினார்.
·
யாத்.13:17-18 பார்வோன்
ஜனங்களைப்
போகவிட்டபின்:
ஜனங்கள் யுத்தத்தைக்
கண்டால் மனமடிந்து,
எகிப்துக்குத்
திரும்புவார்கள்
என்று சொல்லி;
பெலிஸ்தரின்
தேசவழியாய்ப்
போவது சமீபமானாலும்,
தேவன் அவர்களை
அந்த வழியாய் நடத்தாமல்,
சிவந்த சமுத்திரத்தின்
வனாந்தர வழியாய்
ஜனங்களைச்
சுற்றிப் போகப்பண்ணினார்.
இஸ்ரவேல்
புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து
அணியணியாய்ப்
புறப்பட்டுப்போனார்கள்.
புவியியல்
முக்கியத்துவம்
வாய்ந்த இடங்கள்
3. ஏத்தாம்
·
சுக்கோத்-திலிருந்து ஏத்தாமிற்கு
·
யாத்.13:20 அவர்கள் சுக்கோத்திலிருந்து
பிரயாணப்பட்டு,
வனாந்தரத்தின்
ஓரமாய் ஏத்தாமிலே
பாளயமிறங்கினார்கள்.
4. ஈரோத்
·
மிக்தோலுக்கும் சிவந்த சமுத்திரத்திற்கும்
இடையே பாளயமிறங்குதல்
(யாத்.14:2)
·
சிவந்த
சமுத்திரத்தை
கடத்தல்
·
எகிப்திய சேனைகள் அழிக்கப்படல்.
5. சூர்
வனாந்தரம் (யாத்.15:22-23)
·
மாராவின் கசந்த நீர்
மதுரமாய்
மாறுதல்.
புவியியல்
முக்கியத்துவம்
வாய்ந்த இடங்கள்
6. ஏலிம்
(யாத்.15:27)
·
இஸ்ரவேலர் 12 நீருற்றுக்கள்,
70 பேரீச்சமரங்கள்
நடுவில் பாளயமிறங்குதல்.
7. சீன்
வனாந்தரம்
(யாத்.16:1)
·
உணவுக்காக
மன்னாவும்,
காடைகளும்
வழங்கப்படுதல்.
8. ரெவிதீம்
(யாத்.17:1)
·
கன்மலையிலிருந்து தண்ணீர் உண்டாதல்.
·
இஸ்ரவேல் அமலேக்கியரோடு
யுத்தம் செய்தல்.
(யாத்.17:8-16)
புவியியல்
முக்கியத்துவம்
வாய்ந்த இடங்கள்
9. சீனாய்
மலையும், வனாந்தரமும்
(யாத் 19:1-2)
·
எகிப்தைவிட்டு புறப்பட்டு
3ம் மாதம் இங்கு
சேர்ந்தார்கள்.
·
சீனாயில் 2 ஆண்டுகள்
தங்கியிருந்தார்கள்.
·
மோசேயைக் கொண்டு நியாயப்பிரமாணம்
கொடுக்கப்பட்டது.
·
ஆசரிப்புக்கூடாரம் நிறுவப்பட்டது.
·
1வது மக்கள் தொகை
கணக்கெடுப்பு
செய்யப்பட்டது.
யாத்திராகமத்தின்
முக்கியத்துவம்
1. தேவனுடைய
வாக்குத்தத்தங்கள்
நிறைவேற்றபடும்
செயல் ஆரம்பிக்கும்
இடம் யாத்திராகமம்.
·
ஆதியாகமத்தில் தேவன் ஆபிரகாமிற்கு
அவனது சந்ததியார்
பலம்மிக்க தேசமாகவும்,
கானான் தேசத்தை
சுதந்தரிப்பவர்களாகவும்,
அவர்களால் உலகம்
முழுவதும் தேவனுடைய
ஆசீர்வாதத்தை
பெற்றுக்கொள்ளும்
என்றும் வாக்களித்திருந்தார்.
·
யாத்திராகமத்திலிருந்துதான் வேதாகமத்தின்
சம்பவங்கள் விறுவிறுப்பாக
நடந்தேறுகிறது.
2. தேவனுடைய
வல்லமை வெளிப்படுத்தப்பட்டது
·
எகிப்தின் கசப்பான கொத்தடிமை
வாழ்வும், துன்பமும்
இஸ்ரவேலருக்கு
மிகுந்த கஷ்டத்தை
கொடுத்திருந்தது.
·
ஆனால்
தேவனோ ஆபிரகாம்,
ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களின்
சந்தியினராகிய
இவர்களை தமது ஓங்கிய
புயத்தினாலும்,
வல்லமையுள்ள கரத்தினாலும்
10 ஒப்பிடமுடியாத
அதிசயங்களை எகிப்தியர்,
இஸ்ரவேலர்
காணும்படி செய்து
அவர்களை விடுவித்தார்.
யாத்திராகமத்தின்
முக்கியத்துவம்
3. தேவனுடைய
ஜனங்களை வனாந்தரத்தில்
தயார்ப்படுத்துதல்
·
ஆதியாகமத்தில் தேவன் ஒரு
குடும்பத்தினரோடு
செயல்படுகிறார்.
ஆனால் யாத்திராகமத்தில்
தேவன் ஒரு முழு
தேசத்தோடும்
செயற்படுகிறார்.
·
யாத்திராகமம் முழுவதும்
தேவன் இஸ்ரவேலை
தமது ஜனமாக்கும்
முயற்சியின் விபரிப்பு
·
இப்போது
அவர்கள் அவருடைய
ஜனங்கள், அவர்
அவர்களுடைய தேவன்
·
அவர்களுக்கு
அவர் பத்து கற்பனைகளை
கொடுத்தபோது
இஸ்ரவேல்
ஜனத்திற்கும்
தனக்குமான
உறவை உறுதியாக
குறிப்பிடுகிறார்.
யாத் 20:2 உன்னை
அடிமைத்தன
வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து
புறப்படப்பண்ணின
உன் தேவனாகிய கர்த்தர்
நானே.
·
அவர்களது
நம்பிக்கைகள்,
நடத்தைகள், வழிபாடுகளுக்கான
அடிப்படைகளை
அவர் அவர்களுக்கு
அளித்தார்.
·
இந்த
நியாயப்பிரமாணத்தின்
மூலமாக வாழ்வின்
சகலமும் தேவனோடு
சம்பந்தப்பட்டது
என்பதை தெரிவிக்கிறார்
·
அவரது
ஆளுகைக்கு உட்படாதது
எதுவுமில்லை என்பதை
தெளிவுபடுத்துகிறார்.
·
இப்போது
அவரது பிரசன்னம்
அவரது ஜனங்கள்
மத்தியில் இருக்கும்.
·
ஆசரிப்புக்கூடாரம் என்னும் கூடாரத்தை
அமைக்க விரிவான
விளக்கங்கள் கொடுக்கப்படுதல்.
·
இஸ்ரவேல் மத்தியில்
வாசம்பண்ண
நோக்கம் கொண்டு
அவரது மகிமையை
மேகத்தால் வெளிப்படுத்துதல்
(யாத் 40:34-35)
யாத்திராகமத்தின்
முக்கியத்துவம்
கிறிஸ்துவுக்கும் அவரது
நற்செய்திக்கும்
முன்னோடியானவை
·
தேவனின்
பஸ்காவின்
ஆடு (12:1-28)
·
புளிப்பில்லா அப்பம் (13:3-10)
·
கன்மலை,
வழிநடத்திய மேகஸ்தம்பம்,
அக்கினிஸ்தம்பம்
(13:21-22)
·
வானத்திலிருந்து
வந்த மன்னா (16:1-36)
·
ஜீவத்தண்ணீரின் ஊற்று (17:1-7)
·
ஆசரிப்புக் கூடாரம்
(25-40)
·
சிவந்த
சமுத்திரத்தின்
ஞானஸ்நானம்
எனது எண்ணங்கள்
·
யாத்திராகமம் 400 ஆண்டுகள்
கால இடைவெளிக்கு
பின்பாக இஸ்ரவேலரின்
வரலாற்றை தொடர்கிறது.
·
இது
மல்கியாவின்
புத்தகத்திற்கும்
மத்தேயு நற்செய்தி
நூலுக்கும்
இடையேயான 400 ஆண்டுகளக்கு
ஒத்தது.
·
ஆதியாகமத்திற்கும், யாத்திராகமத்திற்கும்
இடையான 400 ஆண்டுகள்
காலப் பகுதியில்
இஸ்ரவேல்
ஜனங்கள் சொல்லொணா
துன்பங்களையும்,
வேதனைகளையும்
அனுபவித்தார்கள்.
·
அது
அவர்களை அடிமைப்படுத்திய
எகிப்திய
ஆட்சியாளர்களால்
நேர்ந்தது. ஆனால்
இரண்டு ஏற்பாடுகளுக்கிடையே
நடந்த அடிமைத்தனம்
யூத ஜனங்களின்
மத அடிப்படைவாத
அமைப்பினால்
வந்தது.
·
அவர்கள்
கண்ணிருந்தும்
காணாமலும், காதிருந்தும்
கேளாமலும்
அவர்கள் இருதயங்கள்
இருளடைந்திருந்தது.
எனது எண்ணங்கள்
·
யாத்திராகமத்தில் ஜனங்கள்
விடுதலைக்காக
தேவனை நோக்கி கதறினார்கள்.
·
அதுபோல
சிமியோன்,
அன்னாள் போன்றவர்கள்
தேவனுடைய இரட்சிப்பிற்காக
தேவனை நோக்கி ஜெபித்து காத்திருந்தார்கள்.
·
தேவன்
அவர்களது கதறுதலை
கேட்டு எகிப்தின்
அடிமைத்தனத்திலிருந்து
விடுவிக்க மோசேயை எழுப்பினார்.
·
அதுபோல
பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து
விடுவிக்க தேவன்
இயேசுவை எழுப்பினார்.
·
மோசே பிறந்தபோது
எபிரேய ஆண்குழந்தைகள்
எகிப்தியரால்
கொல்லப்பட்டார்கள்.
·
இயேசு
பிறந்தபோது
எபிரேய ஆண்குழந்தைகள்
ஏரோதினால்
கொல்லப்பட்டார்கள்.
·
மோசேயும், இயேசுவும்
குழந்தைகளாக இருந்தபோது
எகிப்தில்
பாதுகாக்கப்பட்டார்கள்.
·
மோசேயும், இயேசுவும்
தமது சொந்த ஜனங்களால்
புறக்கணிக்கப்பட்டார்கள்.
·
மோசேயும், இயேசுவும்
அதிசயங்களையும்,
அற்புதங்களையும்
செய்தார்கள்.
எனது எண்ணங்கள்
·
மோசே விண்ணப்பம்பண்ணி
இஸ்ரவேலருக்கு
உணவும், தண்ணீரும்
கொடுத்தார்.
·
இயேசுவோ வானத்திலிருந்து
வந்த உணவும், ஜீவத்தண்ணீமானவராயிருந்தார்.
·
இருவருமே
மலைமீது மரணித்தார்கள்.
·
மரித்த
மோசேயை அடக்கம்
செய்த தேவன்,
·
இயேசுவை
மரித்தோரிலிருந்து
உயிர்த்தெழச்செய்தார்.
எனது எண்ணங்கள்
·
நமது
வாழ்க்கையும்
ஒரு பயணமே.
·
தேவன்
இல்லாமல் நமது
வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்
கொள்ளவோ, அசையவோ
முடியாது.
·
தேவன்
நமக்காக ஒரு திட்டத்தை
வைத்திருக்கிறார்.
·
தேவன்
வாக்குத்தம்
செய்கிறவர்.
·
தேவன்
தமது வல்லமையை
வெளிப்படுத்துகிறவர்.
·
தேவன்
வழிகளை வாய்க்கப்
பண்ணுகிறவர்.
·
தேவன்
நமது தேவைகளை நிறைவேற்றுகிறவர்.
·
தேவன்
தமது வாக்குத்தத்தின்
பலன்களை தருவதற்கு
முன் நம்மை ஆயத்தப்படுத்துகிறவர்.
·
தேவன்
நம்மேல் மனதுருக்கமுடையவர்
ஆகவே நம்மை கைவிடமாட்டார்.
Comments
Post a Comment