Posts

Showing posts from December, 2025

வரலாற்று-கிறித்தவக் கீர்த்தனைகள் கன்னியாகுமரி

வரலாற்று-கிறித்தவக் கீர்த்தனைகள் கன்னியாகுமரி மாவட்டம் புத்தகம் வரலாற்று நோக்கில் கிறித்தவக் கீர்த்தனைகள்             சீர்திருத்தச் சபை (Protestant Church) தோன்றக் காரணமான மார்ட்டின் லூதர் (1483-1546), ஜோகான் வால்டர் ஆகிய இருவரும், ஆலயத் தொழுகைகளில் பாடித் தேவனை மகிமைப்படுத்தப் புதிய பாடல்களை எழுதி, இசையமத்தினர்.   அப்பாடல்களைத் தொகத்து 1524-இல் வெளியிட்டனர்.   முதலில் ஜெர்மன் மொழியில் வெளியான இப்பாடல்களே ஞானப்பாட்டுகள் (Hymns) என அழைக்கப்பட்டன.             ஜெர்மன் நாட்டவரான சீகன்பால்கு ஐயர் இயேசு கிறிஸ்துவின் அருட்தொண்டராய் 1706ஆம் ஆண்டு தமிழ் நாட்டிற்கு வந்தார்.   தமிழ் நாட்டின் தரங்கம் பாடியில் தமிழ் மொழியினைத் தெளிவுறக் கற்றுக் திறம்பட பாடல்களை இயற்றும் ஆற்றல் பெற்றார்.   முறைப்படி தாம் இயற்றிய பாடல்களோடு, ஜெர்மானிய மொழிப் பாடல்களையும் மொழிபெயர்த்து "Book of Hymns set to Malabaric Music" என்னும் பாடல் புத்தகத்தினை 1713 ஆம் ஆண்டு வெளியிட்டார்.   இதுவே சீர்த்திருத்த கிறிஸ்தவச் சபையாரின் முதல் ஞானப் பாடல் புத்தகம்.             தொடர்ந்து நம் நா...

வரலாறு-ஜார்ஜ் உக்ளோ போப்

வரலாறு-ஜார்ஜ் உக்ளோ போப் ஜார்ஜ் உக்ளோ போப் , கனடாநாட்டுக்காரர் .   பெயர்தான் போப் தவிர போப்பாண்டவர் அல்ல‌. பிரிவினை கிறிஸ்தவ வழி 1839ல் தன் 20ம் வயதிலே கிறிஸ்துவினை போதிக்க இந்தியா வந்தார். அதை சொல்வதில் தயக்கமே இல்லை. அவர் கிறிஸ்துவத்தை போதிக்கவே வந்தார்.   அந்நாட்களில் ஐரோப்பியர் மனநிலை அப்படி இருந்தது, இந்திய சூழலும் இங்கிருந்த பல வர்க்க வேறுபாடும் சாதியும் அவர்களை "இந்து தேச மாது சிரோ மணிகளை விந்தை ஒளிக்குள் வரவழைப்போம்" என உற்சாகமாக பாட வைத்தது. அதற்கு பல காரணங்கள்.   அந்நாளைய இம்மாதிரி போதகர்களுக்கு மொழி பெரும் தடை, வியாபாரம் ஆட்சி என்றால் டுபாஷி வைத்து சமாளிக்கலாம் , ஆனால் போதனை என்றால்? எப்படி தமிழ்படித்தே ஆகவேண்டும் .   இந்த போப் தூத்துகுடி பக்கம் சாயர்புரத்தில் தங்கினார், அருகிருந்த ராமானுச பிள்ளை, ராமானுச கவிராயர் , நம்மாழ்வாரிடம் தமிழ்படித்தார் .   அப்படியே சிலரிடம் தெலுங்கும் கற்றார். கிறிஸ்துவினை போதிக்க தொடங்கினார், அதற்காகத்தானே சம்பளம் கொடுத்து அனுப்பி வைத்தார்...