வரலாறு-ஜார்ஜ் உக்ளோ போப்
ஜார்ஜ் உக்ளோ போப், கனடாநாட்டுக்காரர்.
பெயர்தான்
போப் தவிர போப்பாண்டவர் அல்ல.
பிரிவினை கிறிஸ்தவ வழி 1839ல்
தன் 20ம் வயதிலே கிறிஸ்துவினை
போதிக்க இந்தியா வந்தார். அதை சொல்வதில் தயக்கமே இல்லை.
அவர் கிறிஸ்துவத்தை போதிக்கவே வந்தார்.
அந்நாட்களில் ஐரோப்பியர்
மனநிலை அப்படி இருந்தது, இந்திய சூழலும் இங்கிருந்த பல வர்க்க வேறுபாடும் சாதியும் அவர்களை "இந்து தேச மாது சிரோ மணிகளை விந்தை ஒளிக்குள் வரவழைப்போம்" என உற்சாகமாக
பாட வைத்தது.
அதற்கு பல காரணங்கள்.
அந்நாளைய
இம்மாதிரி போதகர்களுக்கு மொழி பெரும் தடை, வியாபாரம் ஆட்சி என்றால் டுபாஷி வைத்து சமாளிக்கலாம், ஆனால்
போதனை என்றால்? எப்படி தமிழ்படித்தே ஆகவேண்டும்.
இந்த போப் தூத்துகுடி பக்கம் சாயர்புரத்தில்
தங்கினார், அருகிருந்த ராமானுச
பிள்ளை, ராமானுச கவிராயர், நம்மாழ்வாரிடம் தமிழ்படித்தார்.
அப்படியே சிலரிடம் தெலுங்கும்
கற்றார்.
கிறிஸ்துவினை
போதிக்க தொடங்கினார், அதற்காகத்தானே சம்பளம் கொடுத்து
அனுப்பி வைத்தார்கள், தஞ்சாவூர் பக்கமெல்லாம்
தங்கி இருந்து கிறிஸ்தவ தொண்டு செய்தார்
தமிழனாக
மாற அவர் தனக்கே சூட்டிய பெயர் ஞான சிகாமணி.
(அது சுத்த தமிழ்பெயரா
என்றால் இல்லை, ஆனால் அக்கால தமிழ் அப்படித்தான் இருந்திருக்கின்றது)
முதலில் ஒழுங்காக கிறிஸ்தவ பணி செய்திருக்கின்றார்,
பல மக்களை கிறிஸ்தவராக மாற்றி இருக்கின்றார், ஆனால்
சிக்கல் சாதி வடிவில் வந்திருகின்றது. கிறிஸ்தவராக மாறிய பின்னும் "நாங்கள் உயர்ந்த சாதி, அவன்
தாழ்ந்த சாதி அவனை எங்களுக்கு அடங்க சொல், கடைசி
வரிசையில் வை எங்களுக்கே முன்னுரிமை கொடு.." என சீறியிருக்கின்றார்கள்.
"அன்பர்களே கிறிஸ்துவத்தில்
சாதி இல்லை, எல்லா சாதியினரின் மீட்புகுக்காக
இயேசு சிலுவையில் தொங்கினார்" என்றெல்லாம் அவர் போதித்தாலும்
சாதி கிறிஸ்தவர்கள் கேட்கவில்லை.
சாதியினை
வைத்துகொண்டு கிறிஸ்துவம்
வளர்க்க அவர் விரும்பவுமில்லை, இந்த சாதி ஒழியாது
எப்படியும் நாசமாய் போங்கள் என மனதிற்குள் சொல்லிவிட்டு
சமய பணிக்கு முழுக்கு போட்டார்.
அவர் எழுதிய கடிதங்கள் அதைத்தான் சொல்கின்றன, தமிழக சாதி
அவருக்கு உண்மையிலே ஞானத்தை கொடுத்தது,
மனிதர் உண்மையான ஞானசிகாமணி
ஆனார்.
தமிழ்நாட்டு சாதிவெறி
சாதாரணம் அல்ல என்பதும், முழுக்க கிறிஸ்துவம் அறியாமல்
மதம் மாறுபவர்களால் சாதியினை
விட முடியாது எனபதும் அவருக்கு விளங்கிற்று
இந்த ஞானசிகாமணி அதன் பின் பைபிள் மட்டும் வாசிக்காமல்
தமிழரின் எலல இலக்கியதிற்குள்ளும்
புகுந்தார்
விளைவு நாலடியார், திருவாசகம்,
புறநானுறு, நன்னூல் என பல தத்துவ நூல்களை கற்றார். அதன்
பின் அவர் போக்கு மாறிற்று.
ஆம் கிறிஸ்தவ போதனை குறைந்தது, தமிழரின் மிகபெரும் தொன்மையான சிந்தனைக்கு
அடிமையானார். திருவாசகம் அவரை அழ வைத்தது. அவரே அது பற்றி
எழுதினார், இப்படியாக
"பைபிளின் பால்
என்பவரும், புனிதரில் பிரான்சிஸ்
அசிசி என்பவருமே மிக உருக்கமாக எழுதுவார்கள் என எண்ணியிருந்தேன், இங்கோ மாபெரும் பக்திமான்கள் உருக உருக எழுதியிருகின்றார்கள்.
இவர்களை விட மிஷினரிகளின்
பக்தி பெரிதல்ல" என உணச்சி
வசப்பட்டு சொன்னார்.
திருகுறள்
அவருக்கு மிகபெரும் ஞான நூலாக
தெரிந்தது, இது சாதாரண நூல் அல்ல, உலகத்தார் அனைவரும்
படிக்க வேண்டிய நூல் என திருகுறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.
அத்தோடு
விடவில்லை அவர் மனம் கவர்ந்த திருவாசகம் முதல் புறநானாறு, நாலடியார், நான்மணிகடிகை
எல்லாம் ஆங்கிலத்தில் அவரால் மாறிகொண்டே இருந்தன.
லண்டனின்
பத்திரிகைகளிலும் கல்லூரியிலும் அது கட்டுரையாக வந்தன, தமிழ் இலக்கியங்களுக்கு
லண்டனில் பெரும் கவுரவம்
அவரால் வந்தது.
சமயம் போதிக்க வந்தவன், தமிழ்நாட்டு பண்டை
இலக்கியத்தில் வீழ்ந்தால் அந்த மேலிடம்
விடுமா?
திமுகவிற்குள்
ஏதும் பாஜகவின் ஸ்லீப்பர்
செல் வந்து கலந்து கலைஞரின் தமிழில் கரைந்தால் விடுமா?
அவரின் விசுவாச வாழ்வு திசைமாறுகின்றது
என சொல்லி முதலில் பெங்களூருக்கு அழைத்தார்கள், அங்கு
ஒரு பள்ளி தொடங்கினார்.
பின்பு லண்டனுக்கு
அழைத்தார்கள், பிரிட்டிஷாருக்கு தமிழத்தை
ஆளும் வேலை இருப்பதால் அவரை எப்படி பயன்படுத்தலாம் என யோசித்தார்கள்.
இதனால் லண்டன் பல்கலை கழக
தமிழ் தெலுங்கு பேராசிரியர் என அமர்த்திகொண்டார்கள்,
அங்கு காரணம் அன்று ஆளதொடங்கிய வெள்ளையருக்கு
தமிழ், தெலுங்கு கொஞ்சம் தெரிய வேண்டிய அவசியம்
இருந்தது.
தமிழகத்தில் எது செய்யலாம், எது செய்ய கூடாது என்ற
பெரும் பாடம் நடத்த போப் தேவைப்பட்டார், அப்படியே லண்டனில்
பணியாற்றி அங்கே மறைந்தார்.
அன்றைய தமிழகத்து தமிழறிஞர்களுக்கும், சைவர்களுக்கும்
அவர் மேல் பெரும் அபிமானம் இருந்தது. காரணம் திருவாசகத்தை
படித்துவிட்டு அவர் அழுததை நேரில் கண்டிருக்கின்றார்கள்.
அதனை மொழிபெயர்க்க போகின்றேன்
என சொல்லி ஒவ்வொரு வரிக்கும் அவர் ஆங்கிலத்தில் வரி
கிடைக்காமல் வார்த்தை கிடைக்காமல் உருகி அழுததை பார்த்திருக்கின்றார்கள்.
ஆம் இனிமையான மொழி என ஆங்கிலேயன்
பெருமைபட்ட மொழியில் மாணிக்கவாசகரின்
வரிகளுக்கு வார்த்தைகளே இல்லை.
ஒரு மேல்நாட்டு ஆங்கிலேயனை நம்ம ஊர் திருவாசகம் இப்படி உருக்கிவிட்டதே
என்ற பெருமிதம் அவர்களுக்கும் இருந்திருக்கின்றது
இப்படியாக இந்துக்களிடமும்
பெரும் மதிப்பினை பெற்றவர் போப்
தமிழ் தெலுங்கு ஆசிரியராக லண்டனில் பணியாற்றி அங்கேயே மறைந்தார் ஜி.யு.
போப்.
"ஒரு தமிழ்மாணவன் இங்கே உறங்குகின்றான்" என என் கல்லறையில் எழுதுங்கள் என்பது
தான் இங்கே தங்க போகின்றோம் என்ற நினைப்பில்
தன் தமிழக நண்பர்களிடம் சொன்னதே அப்படி உயில் எல்லாம் அவர் எழுதவில்லை, லண்டனில் அவர் கல்லறையிலும் அப்படி
கல்வெட்டு இல்லை.
ஆனால் அப்படி பொறிக்கபட
வேண்டும் என அவர் விரும்பியிருக்கின்றார், இன்னும் தன்
கல்லறை தமிழர் பணத்தில் அமைய வேண்டும் என்றும் தன் உடல் அடக்கத்தின்
பொழுது திருகுறளும் திருவாசகமும்
ஆங்கிலத்தில் பாடபடவேண்டும் என்றெல்லாம் சொல்லியிருக்கின்றார்.
கல்லறை லண்டனில் அமைந்துவிட்டதால் அவர் ஆசைபடி அவ்வாசகம் பொறிக்கபடவில்லை.
ஆனால் பச்சையப்பா கல்லூரி
ஆசிரியர்கள் நிதிதிரட்டி அவர் கல்லறை அமைய
அனுப்பினார்கள் என்கின்றது வரலாற்று செய்திகள்.
(ஆனால் கல்லறை ஒன்றும் விஷேஷமாக
இல்லை, ஒருவேளை கல்லறை நிதியில் ஊழல் நடந்திருக்கலாம்)
அவர் வாழ்ந்த சாயர்புரத்தில்
ஒரு கல்லூரி அவர்பெயரால் தொடங்கபட்டு
இன்னும் நடக்கின்றது. ஜியு போப்ப்பின்
பெயர் இன்றும் இங்கு நிலைபெற்று நிற்கின்றது.
அவருக்கு சென்னையிலும் சிலை
உண்டு, வள்ளுவன், அவ்வையார்
வரிசையில் அவருக்கும் சென்னை கடற்கரையில் சிலை வைத்தார் கலைஞர்.
ஜி.யு
கிறிஸ்துவினை சுமந்து இங்கு வந்தார், ஆனால் திருவள்ளுவரையும், மாணிக்கவாசகரையும்
லண்டனுக்கு கொண்டு சென்றார்.
எங்கிருந்தோ வந்து தமிழ்கற்று
தமிழராய் வாழ்ந்து தமிழ் இலக்கியங்களை
உலகெல்லாம் கொண்டு சென்ற, ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் தமிழில் திருக்குறளையும்
திருவாசகத்தையும் நாலடியாரையும்
முழங்கிய அந்த பெருமகனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.
இங்கிலாந்து
வரலாற்றில் முதன் முதலில் "நானும் தமிழன்" என கம்பீரமாக, பெருமையாக
சொன்னவன் அவனே.
Comments
Post a Comment